+2 தேர்வு பரிசுகள்
ஆண்டுதொறும் +2 தேர்வு எழுதியுள்ள உறவு
மாணவ/மாணவிகளில் உயர் மதிப்பெண் பெறுவோருக்குக் கீழ்க்கண்டபடி
பரிசுகள்வழங்கப்படும்:-
1. மொத்தம் 1200 - மதிப்பெண்களில் முதல் மூன்று நிலை அடையும்
மாணாக்கர்களில் இருபாலருக்கும், தனித் தனியாக
I. பரிசு ரூ. 1250/-
II. பரிசு ரூ.750/-
III. பரிசு ரூ.500/-
2. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,
கணிதம்,வணிகவியல், கணக்கியல், கணிப்பொறியியல் ஆகிய ஒவ்வொரு
பாடத்திலும்
முதல் நிலைபெறும்
இருபாலருக்கும் தலா ரூ.250/-
3. எந்தப் பாடத்திலும் 200க்கு 200 பெற்றால் ரூ.250/-
4. மாநில அளவில் இருபாலரில் மொத்த மதிப்பெண்கள் 1200க்கு முதல்
மூன்று நிலை பெற்றதாக அரசு அறிவிக்கும் உறவு மாணவச்
செல்வங்களுக்கு மேற்கண்ட பரிசுத் தொகை விகிதம் இரண்டு மடங்காக
வழங்கப்படும்.
மொத்தம் 1200க்கு 1050க்குக் குறையாமலும், தனித்தனி பாடங்களில்
200க்கு 160க்குக் குறையாமலும் மதிப்பெண் பெறும் உறவு
மாணக்கர்கள் மதிப்பெண் பட்டியலின் செராக்ஸ் படியுடனும்
பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடனும் முழு முகவரியைக்
குறிப்பிட்டு ஒரு தொண்டு மன்ற உறுப்பினரின் பரிந்துரை
கையொப்பம் பெற்று விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
புத்தக வங்கி
கீழ்க்கண்ட தகுதிகள் உள்ள மாணக்கர்கள் புத்தகம் கேட்டு
விண்ணப்பிக்கலாம். கிடைக்கும் விண்ணப்பங்களில் தகுதியுள்ள
மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெறப்பட்டுள்ள புத்தக வங்கி
நன்கொடை எண்ணிக்கையைப் பொருத்து அவர்களுக்கு புத்தகங்கள்
வழங்கப்படும்
1. ஒரு தொண்டு மன்ற உறுப்பினருக்கு உறவினராயிருத்தல்.
2. M.B.B.S, பட்டப் படிப்பில் இந்த ஆண்டு சேர்ந்திருத்தல்
3. குடும்ப ஆண்டு வருமாணம் ரூ. 50,000- க்கு மேற்படாதிருத்தல்.
நுண்கலை மாணவர்களுக்கு
பரிசுகள்
திருமதி சந்திரா குப்புராஜ் நினைவு அறக்கட்டளை
நம் உறவினர்களிடையே நுண்கலைகளைப் பற்றிய உணர்வு அதிகரிக்க
வேண்டும் என்னும் பேருநோக்கோடு திருமதி சந்திரா குப்புராஜ்
நினைவு அறக்கட்டளை ரூ.25,000/- (ரூபாய் இருபத்தையாயிரம்)
மூலதனத்துடன் சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றத்தில்
நிறுவப்பெற்றுள்ளது.
உறுப்பினர்கள்அல்லது அவர்தம் உறவினர்களின் மக்கள் (இருபது
வயதுக்கு அதிகப்படாத சிறுவர், சிறுமியர்) தென்னிந்திய இசை (கர்நாடக
இசை) அல்லது பரத நாட்டியம் ஆகிய துறைகளில் ஒவ்வோர் ஆண்டும்
உயர்ந்த முறையில் தேர்ச்சி பெற்ற மூவருக்கு ஒவ்வொன்றும் சுமார்
ரூ.1,000/- பெறுமானமுள்ள மூன்று பதக்கங்களோ அல்லது வேறு
பரிசுகளோ அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்பது இந்த
அறக்கட்டளையின் நோக்கமாகும்.
கர்நாடக இசை (குரலிசை அல்லது கருவி இசை) மற்றும் பரத நாட்டியம்
பயிற்றுவிக்கப்படும் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல்
தரப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள நிறுவனங்களில் தேர்ச்சி
பெற்ற உறவு மாணவ மணிகள் தங்களது தேர்ச்சி விவரங்களை (சான்றிதழ்
நகலுடன்) தொண்டு மன்ற உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடன்
விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
|